ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினரான ஜனக்க பண்டார தென்னகோன் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, அந்தக் கட்சியின் உள் நெருக்கடி மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதனை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதென்றால் அதற்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் நபர் கொலை குற்றச்சாட்டு கடுமையானதென்பதனால் தான் இதற்கு தலையிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தக் கலந்துரையாடலின் முடிவாக ஜனக்க பண்டார தென்னகோன் கொழும் தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தப்பட்ட அரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பதலளிக்கும் வகையில் 2001 - 2004 ஆம் ஆண்டின் கோப் அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
