ஏ.எஸ்.எம்.தானிஸ்-
உலக ஆசிரியர் தினமான ஒக்டோபர்-06 திகதியான இன்று மாணவர்கள், பெற்றோர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தளாய் பேராத்துவெளி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நீண்டகால குறைபாடாக இருந்துவரும் கணிதப்பாட ஆசிரியர் குறைபாட்டை உடனடியாக நிவர்த்திக்கக் கோரியே இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திக்கு நேரடியாக விஜயமொன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் அருண சிறிசேன சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்த்து தருவதாக குறிப்பிட்டதோடு, அதிகாரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தீர்வு வரும் வரை தாங்கள் நகரப் போவதில்லை என மாணவர்கள்,பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.



