சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரயிலில் திடீர் தீ விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து கடற்கரை மார்க்கமாக இன்று காலை 9 பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் சென்றது. பெருங்குடி அருகே சென்ற போது, ரயிலில் உள்ள 2 பெட்டிகளில் திடீரென்று தீ பற்றியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர்.
பின்னர் தீயின் வேகம் அதிகமானதால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பயணி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


