சிட்டாய் சிறகடிக்க.
சின்னவர்கள்
நாங்கள்...
சிட்டாய் சிறகடிக்க
விட்டு வையுங்கள்.!!!
பூமிப் பந்தின்
அகல... நீள...
கோடுகளை
கடந்து சென்று...
கனதியாக சாதனை
கம்பத்தை தொட்டுவிட.!!!
கூலிக்கு
எமை அமர்த்தி...
வேதனை தீயில்
தவிக்க வைத்து
இன்பத்தில் மடிகின்றீர்.!!!
சின்னவர்- எம்மை
சீரழிக்கும் மூதேவி
நீங்கள்- அன்பால்
அணைத்து கொள்ளுங்கள்.!!!
கடத்தலுக்கு
சோரம் போகாமல்...
ஐன்னலை உடைத்து
தூக்கி செல்லாமல்...
தோள்மீது தோழமையாக
சாய்ந்து கொள்ள
வேலி போடுங்கள்.!!!
புதிதாக
சட்டம் இயற்றி...
காமப்பசி பிடித்த
வக்கிர நாய்களுக்கு...
தூக்குத் தண்டனையை
அறுவடை செய்யுங்கள்.!!!
நாளை- நாங்கள்
புது தேசத்தில்
புதுயுகம் படைக்க...
சத்தியப் பிரகடணம்
செய்யுங்கள்...
சேயாவை போல்
சீரழியாமல்
சீடனாய் வாழ.!!!
காத்தான்குடி கவிஞர்.
எம்.ரி.எம்.யூனுஸ்.
