கற்பழிப்பு வழக்கில் நடிகர் விஷால் கைது..!

மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் விஷால் தக்கர் (வயது27). இவர் இந்தியில் வெளியான ‘முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’, ‘டாங்கோ சர்லி’, ‘சாந்தினி பார்’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார். மேலும் பல்வேறு டி.வி. தொடர்களிலும் நடித்து உள்ளார்.

இந்தநிலையில், விஷால் தக்கர் மீது மும்பை சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் 26 வயது டி.வி. நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் தெரிவித்தார். அந்த புகாரில், சம்பந்தப்பட்ட நடிகர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்ததாகவும், அதன்பின்னர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி இருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விஷால் தக்கர் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் நடிகர் விஷால் தக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -