அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அவசர அபிவிருத்தி..!

எம்.ஐ.எம்.றியாஸ்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் கோரிக்கைக்கு அமைவாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை(09.10.2015) இரவு சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவத்தின் வேண்டுகோளுக்கமைவாகவே, பிரதியமைச்சரின் இந்த விஜயம் இடம்பெற்றது.

இதன்போது, வைத்தியசாலையின் குறைகள் குறித்து பிரதியமைச்சரிடம், மாகாணசபை உறுப்பினர் தவம் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, பிரதியமைச்சர் பைசால் காசிம், தன்னுடன் வருகை தந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், வைத்தியசாலையின் தேவைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார்.

இதற்கமைவாகவே, விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வாக்குறுதியளித்தார்.

மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், தயட்ட கிருள்ள வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைகளுக்கும், அதனை நிறைவு செய்வதற்காகவும் மொத்தமாக 41.5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இதன்போது கூறினார்.

அத்துடன், வைத்தியசாலையிலுள்ள மின் தூக்கி (லிப்ட்) செயற்பாட்டினை முழுமைப்படுத்துவற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியதோடு, வைத்தியசாலைக்குத் தேவையான அவசரப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை 10 மில்லியன் ரூபாவுக்குள் உடனடியாகக் கொள்வனவு செய்வற்வதற்கான அனுமதியினையும் வைத்திய அத்தியட்கருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கினார்.

மேலும், இவ் வைத்தியசாலையின் நலன்கருதி, எதிர்காலத்தில் துறைசார்ந்த விசேட வைத்திய நிபுணர்களை நியமிப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

இந் நிகழ்வில், அக்கரைப்பற்று மாநாகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டு இயக்குநருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி, அக்கரப்பற்று மாநாகரசபையின் முன்னாளர் பிரதி முதல்வர் எம்.எம். றிசாம், நீர்வழங்கல் அமைச்சின் அக்கரைப்பற்று இணைப்பாளர் ஏ.எல். மர்ஜுன், சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர் கே. முருகானந்தம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுத்தீன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம். தாஸிம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் எம்.ஏ.சி. 
அப்துல் ஹையு உட்பட அதிகாரிகள் உத்தியொகத்தர்கள் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் பிரஈகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -