ஓரே நாளில் வெவ்வேறு அமைச்சர்களினால் இரு பாடசாலைகளின் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் திறப்பு..!

ந.குகதர்சன-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அமைக்கப்பட்ட இரு பாடசாலைகளின் விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஓரே நாளில் வெவ்வேறு அமைச்சர்களினால் புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டன.

மாகாண மற்றும் மத்திய அரசுகளின் அதிகார இழுபறி காரணமாகவே இவ் நிலமை ஏற்பட்டிருந்தது.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம் மற்றும் மீறாவோடை அல்ஹிதாயா பாடசாலைகளுக்கான ஆய்வு கூடங்கள் திறக்கப்பட்ட போது இவ் நிலமை ஏற்பட்டிருந்தது. இந்த பாடசாலைகள் மஹிந்தோய ஆய்வு கூடங்களாக மத்திய அரசினால் அமைக்கப்பட்டன.

தற்போது கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இந்த இரண்டு ஆய்வு கூடங்களையும் திடிரென குறித்த பாடசாலைகளுக்கு சென்று திறந்து வைத்துள்ளார்.

மேற்படி ஆய்வு கூடங்கள் திறந்து வைத்த சில மணித்தியாலங்களின் பின்பு அழைப்பு விடுக்கப்பட்ட பிரதி நிதி என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவற்றினை மீண்டும் வைபவ ரீதயாக திறந்து வைத்தார்.

ஒரு கட்டிடத்திற்கு இரண்டு தடவைகள் ஒரே நாளில் திறப்பு விழா நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவ் இழுபறி நிலைக்கு காரணம் என்னவென்றால் குறித்த பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் செயற்படுவதாக மாகாண சபை கூறுகிறது. ஆனால் இதற்கான நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டதாக மத்திய அரசு பிரதி நிதிகள் கூறுகின்றனர்.

இதேவேளை நிகழ்வுகளில் கலவரம் இடம்பெறாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -