களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் வருடாந்த மாநாடு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ளுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் வருடாந்த மாநாடும் மூத்த உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை (03) பாணந்துறை டாட்டா மண்டபத்தில் களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கிளைத் தலைவர் அஷ் ஷெய்ஹ் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்ஹ் ரிஸ்வி முப்தி அவர்களும் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்ஹ் எம்.எம்.எம்.முபாரக் (கபூரி) ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கௌரவ அதிதிகளாக முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் மௌலவி எம்.எச்.நூருல் அமீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தனாதிகாரி அஷ் ஷெய்ஹ் ஏ.எல்.எம்.கலீல் மௌலவி, சிரேஷ்ட உறுப்பினர் சுபியான் மௌலவி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இம்மாநாட்டின் போது இஸ்லாத்திற்காகவும், சமுகத்திற்காகவும் சேவையாற்றிய களுத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த உலமாக்கள் 12 பேர் களுத்தறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா கிளையின் ஏற்பாட்டில் வருகை தந்த அதிதிகளால் தங்கத்தினாலான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் களுத்தறை மாவட்டக் கிளையின் டூவிட்டர் சேவையினை மாவட்டச் செயலாளர் அஷ் ஷெய்க் முப்தியினால் (நளீமி) அறிமுகப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -