16 மாதங்களின் பின் அளுத்கமவிலிருந்து வெளியேறும் இராணுவம்..!

ஜூன் 2014இல் அளுத்கம நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்த அங்கு முகாமிட்டிருந்த இராணுவத்தினர் 16 மாதங்களின் பின் நேற்று அங்கிருந்து முற்றாக வெளியேறினர்.


இவர்கள் அங்கு நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் முகமாக அளுத்கம அபிவிருத்தி மன்றம் நகர மக்களுடன் இணைந்து அவர்களுக்கு இராப்போஷண விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் அளுத்கம பிரதேசத்தில் பேருவளை, தர்ஹா நகர், வெலிபென்ன பகுதிகளில் வன்செயலால் பாதிக்கப்பட்ட வியாபாரக் கட்டடங்கள், வீடுகள் போன்றவற்றை புனர்நிர்மாணம் செய்ய முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களின் பணி மிகவும் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செய்யப்பட்டதைப் பாராட்டியே இந்தப் பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஹுசைன் ஷாதிக் தெரிவித்தார்.

நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த முப்படை வீரர்கள் 600 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் பரிசுகளும், உயரதிகாரிகளுக்கு நினைவுக் கேடயங்களும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -