சம்மாந்துறை கிராம சேவை உத்தியோகத்தர்களை சந்தித்தார் மாஹிர் mpc

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை கன்டறியும் பொருட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிராம சேவை உத்தியோகத்தர்கள் தான் மக்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என்பதினால் மக்களின் அடிப்படை தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறியும் பொருட்டே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர், இறக்காமம் பிரதேச செயலாளர் கிராமத்தின் அடிப்படை தேவைகளை ஏ.எல்.எம்.நஸீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.ஹம்ஸார், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எம்.மஹ்ரூப், மாஹிர் பவுன்டேசன் தலைவர் வை.வீ.சலீம், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -