10 ஆம் ஆண்டு மாணவன் லேசர் கதிர் மூலம் நுளம்பு கொல்லும் கருவி கண்டு பிடித்து சாதனை..!

நிஸ்மி-
க்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் லேசர் கதிர் மூலம் நுளம்பைக் கொல்லும் கருவி கண்டு பிடித்து சாதனை நிகழ்த்தி பரிசு பெற்றார்.

நுளம்பினை ஒழிப்பதற்கான புதிய உபகரணத்தைக் கண்டு பிடிக்கும் போட்டியில் புதிய புதிய லேசர் கதிர் மூலம் செயற்படும் உபகரணம் ஒன்றைக் கண்டு பிடித்து சாதனை நிகழ்த்தியவர் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் கல்வி பயிலும் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் நதீர் ஜாஸீம் அத்னான் என்னும் மாணவரே.

சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தலுக்கேற்ப கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் ஆறாம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட நுளம்பினைக் கட்டுப்படுத்துவதற்கான வழியினைக் கண்டுபிடித்தல் போட்டியில் நுளம்பினை ஒழிப்பதற்கான லேசர் கதிர் மூலம் நுளம்பைக் கொல்லும் புதிய உபகரணம் ஒன்றினைக் கண்டு பிடித்து சாதனை படைத்ததோடு, புதிய கண்டு பிடிப்புக்கான பரிசினைப் பெற்றுக் கொண்டார்.

இந்த இளம் கண்டு பிடிப்பாளருக்கான பரிசளிப்பு வைபவம் இன்று (19) திங்கட்கிழமை அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் அதிபர் ஏ.ஜி.அன்வர் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜனாபா எம்.ஏ.பாஸிலா சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பரிசுக் காசோலையை இளம் கண்டு பிடிப்பாளர் செல்வன். நதீர் ஜாஸீம் அத்னான் அவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.

இளம் கண்டு பிடிப்பாளர் மாணவன் நதீர் ஜாஸீம் அத்னான் தனது கண்டு பிடிப்பை பற்றி விளக்கியதோடு, அதனை இயக்கியும் காட்டினார். இதற்காக கழிக்கப்பட்ட கணனி உபகரணத்துடன் 100 ரூபா பணமே செலவு செய்ததாகவும் தெரிவித்தார்

நிகழ்வில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் இ.இராஜேந்திர மூர்த்தி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி, மாணவனின் தந்தையும், பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளருமான டாக்டர் எம்.ஏ.நதீர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -