ஜெனிவா செல்வது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை TNA..!

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் வினவிய போது,

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாகவே தாம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள நிலையில், அதில் பங்ககொள்வது குறித்து இதுவரையில் தீர்மானிக்க வில்லை என்ற பிரதான எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

எனினும், 14ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானதன் பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -