சம்மந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை பெரும் கௌரவமாகும் - ஹரீஸ் MP வாழ்த்து

ஹாசிப் யாஸீன்-

மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் 8வதுபாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சிறுபான்மைசமூகத்திற்கு கிடைத்துள்ள மிகக் பெரும் கௌரவமாகும் என திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில்தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதானது,

1983 ஆண்டு காலப்பகுதியின் பிற்பாடு மிக நீண்ட காலத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகதாங்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தமிழ் தேசியத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக இதனை நாம்பார்க்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தஇரா.சம்பந்தன் ஐயா அவர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம்இந்த நாட்டின் மூவின மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு தலைமையாகமாற்றப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாகும். இப்பதவிக்கானஆளுமை, ஆற்றல், தகுதி, அரசியல் முதிர்ச்சி மிக்க நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதானது இன்றுநாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒருசான்றாகும்.

இந்த நல்லாட்சியில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் சந்தர்ப்பத்தில் தாங்கள் இப்பதவியின் மூலம் ஒரு இனத்துக்கும் அநீதி இழைக்காதுஅம்மக்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பீர்கள் என நம்புகின்றோம் எனவும்அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -