BMICH இல் கோலாகலமாக இடம்பெற்ற BCAS CAMPUS இன் பட்டமளிப்பு விழா….!!!

கடந்த புதன்கிழமை 09.09.2015 BCAS Campus இன் 2015ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH இல் நிறுவனத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான தலைமையில் கோலாகலமாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெற்றது.

இங்கிலாந்து நாட்டின் வொல்வஹம்டன் பல்கலை கழகத்தின் பாடநெறிகளை இலங்கையில் உள்ள BCAS CAMPUS இல் பூர்த்தி செய்த 200க்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள். இப்பட்டங்களில் MBA, MSc, QS, Law ஆகிய துறைகளில் மாணவர்களுக்கான Degree மற்றும் Master பட்டங்கள் அடங்கியிருந்தன.

இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக .வொல்வஹம்டன் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் அந்தியா கிரேகோரி கலந்தி சிறப்பித்தார். மேலும் வொல்வஹம்டன் பல்கலைகழகத்தின் அத்தியட்சகர்களான திருமதி ஜோ க்ட்டன்ஸ்,BCAS கல்வி வளாகத்தின் சிரேஸ்ட கல்வி ஆலோசகர் பேராசிரியர் சானிகா, பொதுமுகாமையளர் பொறியியலாளர் கெளதூர் முஸ்தபா, மற்றும் இஸ்திகார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வீடியோ Bcas இன் பட்டமளிப்பு விழா:- youtube.com/watch?v=NVjgne2orIc&feature=youtu.be






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -