யாழ்.பல்கலையில் மாணவர்களுக்கிடையில் மோதல்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதனை தடுக்கச் சென்ற பொலிஸாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்றய தினம் புதுமுக மாணவர்கள் பல்கலைக்கழக சுற்றாடலில் உள்ள கல் ஆசனங்களில் அமரக்கூடாது எனவும் இடுப்பு பட்டி அணிய கூடாது எனவும் 3ம் வருட மாணவர்கள் கூறிய நிலையில் இரு பகுதிக்கும் முறுகல் நிலை உருவானது.

நிலமை நேற்று மதியம் தணிந்து காணப்பட்டது. இதனையடுத்தே இன்றைய தினம் மீண்டும் முறுகல் நிலை உருவாகி மோதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீதிக்கு வந்து அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என பொலிஸாருடன் வாதிட்டனர்.

எனினும் வீதியில் நின்று மாணவர்கள் சண்டையிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறி அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -