ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்..!

எம்.வை.அமீர் -

திரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இரத்ததான முகாம் 13-09-2015 அன்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையில் இடம்பெற்றது.

“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32) எனும் அல்குர்ஆன் கூறும் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக இளைஞர்களும் யுவதிகளும் ஏனையோரும் தங்களது இரத்தங்களை தானம் செய்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களான டாக்டர் எfப்.எம்.ஹில்மி, டாக்டர் என்.றமேஸ் மற்றும் டாக்டர் எம்.ஏ.எfப்.சானாஸ் உள்ளிட்ட வைத்தியர்கள் தலைமையிலான கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்இரத்த சேகரிப்பு குழுவினரால் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் ஜமாஅத்தினர் இரத்தங்களை வழங்கக்கூடியவர்களை திரட்டி அதிகளவான இரத்தங்களை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -