குறைநிறைகளை அறிந்து கொள்வதற்கு ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர்..!

போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் இடையில் ஹற்றன் புகையிரத நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் பயணத்திற்கான நோக்கத்தை இவ்வாறு தெரிவித்தார்.

இந்த புகையிரதத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், தற்போது காணப்படுகின்ற குறைநிறைகளை அறிந்து கொள்வதற்காக புகையிரதத்தில் தான் பயணம் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு குறைநிறைகளை இணங்கண்டுள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கைகளை தான் சிறந்த முறையில் மேற்கொள்ள இருப்பதாகவும், பின்தங்கிய நிலையில் காணப்படும் புகையிரத சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரித்தார்.

தற்போது கிடைத்திருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சு தனக்கு சவால் இல்லை என்றும் இதற்கு முன்னர் பதவி வகித்த அமைச்சுக்களை சரிவர நிர்வகித்ததாகவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பயணத்தில் ரயில் திணைக்கள பொது முகாமையாளர் விஜே அமரதுங்க உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -