சவூதியின் கிழக்கு பிரதேசத்திற்கான நிரந்தர தூதரக கிளையை அமைக்கவும்- இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டணி கடிதம்

எம்.வை.அமீர்-

சவுதி அராபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கை மக்கள், தமது தூதரகஅலுவல்களுக்காக ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. தம்மாம் நகரில் மட்டுமல்லாது , அந்த பிராந்தியத்தில் இருக்கின்ற 5 நகரங்களில் உள்ள மக்கள், மாதம் ஒரு முறை வரும் நடமாடும் சேவைக்காக காத்திருக்கவேண்டி இருப்பதால் பல அசௌகரிகங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . 

ஒரு மாத கால தாமதம் என்பது மத்திய கிழக்கை பொறுத்த வரையில் மிகவும் சிக்கலான விளைவுகளையும் உருவாக்கிகுகிறது என்பது மகவும் கவலைக்குரியதாகும். 

மேலும் பிராந்தியத்தில் தூதரகம் இன்மையால் , இலங்கைக்கான வேலை வாய்ப்புகளும் கை நளுவிச் செல்வதையும் காணக் கூடியதாகவும் இருக்கிறது. ஆகவே மக்களின் அசௌகரிகங்களையும் நாட்டின் பொருளாதார நலனையும் கருத்திற்கொண்டு கிழக்கு பிரதேசத்திற்கான நிரந்தர தூதரக கிளையை அமைத்து தரும்படியும் அது வரைக்கும், நடமாடும் சேவையை வாரம் ஒரு முறையாக அதிகரிக்குமாறும் கோரி இலங்கை தூதரகத்திர்கு , இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணி கடிதம் ஒன்றை கையளித்தது. இதன்போது பிரதான அமைப்பாளர் ரகீப் ஜாபரும், தமாம்-இலங்கை புலம்பெயர் சமுகத்தின் மூத்த உறப்பினர்களும் குழுத் தலைவர்களுமான அலியார் நௌஷாத் மற்றும் அப்துல் மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -