பேருந்தின் இருக்கையில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த வீடிழந்த ஒருவர், அடுத்த நிறுத்தத்தில் அதே பேருந்தில் ஏறிய ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு தனது இருக்கையை வழங்கினார். அதன் பின்னர் மீண்டும் ஒரு இருக்கையில் அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் ஒரு முதியவர் அதே பேருந்தில் ஏறியதும், தனது இருக்கையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும், ஓட்டுனரிடம், பண்பான முறையில் இந்தச் சில்லரைக்கு பதிலாக நோட்டு தர முடியுமா? எனக் கேட்டார். அதற்கு கொஞ்சம் கூட பண்பில்லாத விதத்தில் தர முடியாது என அவரை திட்டினார் ஓட்டுனர்.
இதையெல்லாம், கவனித்து வந்த சக பயணி அதே நிறுத்தத்தில் இறங்கி, அந்த வீடிழந்த நபரிடம், எதற்காக நோட்டு வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அவர், ‘எனக்கு, வெதுவெதுப்பான நீரில் குளித்து, ஒரு நல்ல படுக்கையில் தூங்க வேண்டும் போலிருக்கிறது’ என்றார்.
இதனைக் கேட்டு மனம் வருந்திய அந்த நபர், அந்த வீடிழந்த நபருக்கு 20 பவுண்ட்களை வழங்கினார்.
நமக்கு சுலபமாக பல விஷயங்கள் கிடைப்பதாலேயே, அதன் அருமை தெரியாமலே போய்விடுகிறது. சிலபேரின் தினசரி வாழ்க்கையை உற்றுநோக்கினால், நாம் எவ்வளவு வெட்டிச் செலவு செய்கின்றோம் என்பது புரிய வரும். எனவே நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவைப்போம். முடியாவிட்டால் மதித்து நடப்போம்.
மாலைமலர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -