சவூதி இளவரசரின் 8 அடி உயர மதில் சுவரில் குதித்து ரத்த காயங்களுடன் பொலிசுக்குப்போன பணிப்பெண்

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத்(28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.

இந்திய மதிப்புக்கு சுமார் 240 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மாளிகையில் அமெரிக்காவுக்கு வரும் வேளைகளில் சவுதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தங்குவதுண்டு. சுமார் 22 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில் பலத்த பாதுகாப்புடன் பிரமாண்டமான மதில் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

(உள்ளூர் நேரப்படி) நேற்று பகல் சுமார் பன்னிரெண்டு மணியளவில் இந்த மாளிகையின் சுமார் 8 அடி உயர மதில் சுவரை தாண்டி, ரத்த காயங்களுடன் குதித்து தப்பிவந்த ஒரு இளம்பெண், தன்னுடன் உடலுறவு வைத்துகொள்ளுமாறு இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தன்னை வற்புறுத்தியதாக பெவர்லி ஹில்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இளவரசரின் மாளிகைக்கு விரைந்துசென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அந்த மாளிகையில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.

கைது செய்யப்பட்ட இளவரசர் மீது மேலும் நான்கு பெண்கள் இதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவித்த போலீசார், இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது இயற்கை நியதிக்கு மாறான வகையில் பெண்ணை உடலுறவுக்கு வற்புறுத்திய குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 லட்சம் பவுண்டுகள் (இலங்கை மதிப்புக்கு சுமார் நாலரை (4.5) கோடி ரூபாய்) சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரை அளித்த பெண் இளவரசர் வீட்டில் வேலை செய்துவந்ததாக தெரிகிறது. இவ்வழக்கில் அக்டோபர் மாதம் 19-ம் தேதி இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராவார் என கூறப்படுகிறது.
மாலைமலர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -