மருதமுனையில் வீடுகளுக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்முகப்பரீட்சை

பிஎம்.எம்.ஏ.காதர்-

சுனாமி அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்கு மருதமுனை மேட்டுவட்டையில் நிர்மானிக்கப்பட்ட வீடுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு எஞ்சிய வீடுகளை வழங்குவதற்கு கல்முனை பிரதேச செயலகத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது இதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கான
நேர்முகப்பரீட்சை இன்று 28ம் திகதி மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.


அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் கே.விமலனாதன் தலைமையில் நடைபெற்ற இந்த  நேர்முகப்பரிட்சையில் அம்பாறை மாவட்ட பிரதி காணி ஆணையாளர் தர்சிகா குணவர்த்தன,கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.இராஜதுரை,நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.லாஹிர் மற்றும் கிராம


உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்த மேட்டுவட்டை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள 81 வீடுகளுக்காக 378 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.இன்று 29ம் திகதியும் ஒரு தொகுதியினருக்கு நேர்முகப்பரிட்சை நடைபெறவள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -