கருணா சொல்வதெல்லாம் பொய் - ராணுவ அதிகாரிகள்..!

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா அம்மான் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் பலரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை கருணா அம்மான் அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

அதில் குறிப்பிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பான கருணாவின் கூற்றை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார்.

குறித்த நேர்காணலில் இந்தியப்படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலைகொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டதாகவும் கருணா அம்மான் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகவும் தற்போது ராணுவ அதிகாரிகள் கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

இறுதி யுத்தம் தொடர்பாக கருணா வெளியிடும் தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், இந்தியப் படையினர் ஒருபோதும் வவுனியாவில் நிலைகொண்டிருக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திவயின பத்திரிகை ராணுவத்தினரை மேற்கோள் காட்டி விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -