அதாஉல்லா இல்லாத அக்கரைப்பற்று அநாதையாகியது -படங்கள் இணைப்பு



சாநவாஸ்-

ம்பாரை மாவட்டத்தில் அரசியல் அதிகாரத்தை தன்வசப்படுத்தி தனக்கென்று தனியான இடத்தைப் பிடித்து வைத்திருந்தவர்தான் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத்தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ். ஆனால் கடந்த 15 வருடங்களாக தனது கட்டுப்பாட்டுக்குள் அக்கரைப் பற்றினை வைத்திருந்த அதாஉல்லாவை இன்று ஒரு தேர்தலில் தோற்றுப்போனதும் அவரின் எல்லாமே முடிந்து விட்டதாய் சிலர் கனவில் மிதக்கின்றனர்.


அக்கரைப்பற்றில் அதாஉல்லாவினதும், அக்கரைப்பற்று முதல்வராக இருந்த அதாஉல்லாஹ் சக்கியினதும் படங்களால் சூழப்பட்டிருந்த அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்தில் இன்று இந்துக்களின் கடவுளான வினாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட சுலோககங்கள் கட்டப்பட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டுக் காட்சியளிப்பதனைப் பார்த்து அக்கரைப்பற்றின் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று இன்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.


ஆனால் மூவினங்களும் ஒற்றுமையாய் வாழும் அக்கரைப்பற்றில் இம்முறை அரசியல் அதிகாரம் இல்லாத நிலமையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் மீண்டும் ஒருவருடத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வருவார் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதாஉல்லாவின் இடத்தை நிறப்ப யாராலும் முடியாது என்று மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்றை நாங்கள் கைப்பற்றுவோம் என்போர் முடிந்தால் மாநகரசபையையும், பிரதேச சபையையும் கைப்பற்ற வேண்டும். ஆனால் அதாஉல்லாஹ் இருக்கும்வரை அது ஒருபோதும் முடியாத காரியமாகும்.


ஆதலால் அதாஉல்லாஹ்வை சோர்வடையச் செய்யலாம் என்ற நோக்கில் அவரின் எதிராளிகள் செய்து கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அதாஉல்லாவின் அரசியலுக்கு பசளைபோட்டு வளர்ப்பதாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. எனவே அதாஉல்லா மீண்டும் உயிர்பெற்று எழுந்து வரும் காலம் வெகுதூரம் இல்லை அதுவரை எதிராளிகள் ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம் என்று அதாஉல்லா இடைவளி கொடுத்துள்ளார் என்று அவரின் ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -