பிரதி அமைச்சர் ஹரீஸை வரவேற்று கல்முனை மாநகரமெங்கும் விழாக்கோலம் -படங்கள் இணைப்பு

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

டந்து முடிந்த பாராளமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றியீட்டிய சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதி அமைச்சர்களான எஸ். நிஜாமுதீன் மற்றும் எம்.எம்.எம்.முஸ்தபா போன்றோருக்குப் பின் கல்முனைத் தொகுதி அமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்திருந்தது. கல்முனை மக்களின் இக்குறையை நிவர்த்திக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் பாராளமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்க்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சை வழங்க சிபாரிசு செய்திருந்தார்.

இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதி அமைச்சர் பதவியேற்று முதற்தடவையாக 12.09.2015ம் திகதி சனிக்கிழமை தனது கல்முனை மண்ணுக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே பிரதி அமைச்சரை வரவேற்க மாளிகைக்காடு தொடக்கி கல்முனைத் தொகுதி எங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -