ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை..!

ல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த பொதுத் தேர்தல் நிமித்தம் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இந்த கூட்டணியில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. 

இந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, அதன் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, உள்ளுராட்சி தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்வதற்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சிறுபான்மை கட்சிகளின் சார்பில் தாமும், அமைச்சர் ரவுப் ஹக்கீமும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் மனோகணேசன் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -