பிரதியமைச்சர் பைசால் காசிமிற்கு நாளை வரவேற்பு அமைச்சர் ஹக்கீமும் பங்கேற்பு..!

சுலைமான் றாபி-

ண்மையில் சுகாதார, சதேஷ மற்றும் உள்நாட்டு மருத்துவ பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிற்கு அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் நாளை (12) ஊர் மக்களுடன் சேர்ந்து அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பாடசாலைகள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், சமூகசேவை அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், கல்விசாரா ஊழியர்களால் இம்மாபெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரான பிரதியமைச்சர் அவர்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வெற்றிபெற்று பாராளுமன்றதிற்கு தெரிவாகியுள்ளார்.

இதேவேளை நாளை பி.ப.2.30 மணியளவில் நிந்தவூர் மக்களால் வழங்கப்படவுள்ள இவ்வரவேற்பு நிகழ்விற்கு மு.கா தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மு.கா. செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -