அம்பாரை மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம்- சவால் விடும் மூக்கூட்டணி

சாநவாஸ்-
திர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து குறைந்தது ஐந்து சபைகளை கைப்பற்றுவதற்கான உள்ளக நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசும், ஐக்கிய தேசிய கட்சியின் தயாகமகே அணியும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பலவருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழ் இருந்து வரும் அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் உள்ளூராட்சி மன்றங்கள் இம்முறை முஸ்லிம் காங்கிரசிடம் இருந்து பறிபோகும் சாத்தியம் அதிகமாக உள்ளதாகவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அணிக்காக இம்முறை நடந்த தேர்தலில் 33,000 வாக்குகள் கிடைத்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஆதம்லெப்பை மற்றும் தயாகமகே ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்து ஒருமித்து போட்டியிடும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியைத் தழுவுவதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் சம்மாந்துறைப் பிரதேசசபை, இறக்காமம் பிராதேச சபை, கல்முனை மாநகர சபை, பொத்துவில் பிரதேச சபை, அக்கரைப் பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, அட்டாளைச்சேனைப் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை ஆகியவற்றை தாம் இலேசாக வெற்றி கொள்ளும் நோக்கோடு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -