எம்.ஜே.எம். சஜீத்-
முஸ்லிம்களின் அரசியல் முகவரியினை பெற்றுத் தந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் 15வது நினைவு தினத்தினை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தமுல் குர்ஆனும், துஆப் பிரார்த்தனை நிகழ்வு அட்டாளைச்சேனை தைக்காநகர் ஜும்ஆ பள்ளிவாயலில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும், உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி மாணவர்களினாலும், உலமாக்களினாலும் அல்குர்ஆன் முழுவதும் தமாம் செய்யப்பட்;டதுடன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் ஏ.சி.எம் சுபையிர் மௌலவி அவர்களினால் விஷேட துஆ பிரார்த்தனையும் நடாத்தி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




