இந்த வாரம் COLOMBO வில் ”அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரியுங்கள் ” எனும் தலைப்பிலான மாநாடு BMICH இல் இடம்பெற்றது.இந் நிகழ்வினை இமேடா அமைப்பின் தலைவி நிமல்கா பெர்னாண்டோ தலைமை தங்கினார்.
இதற்கு பிரதம அதிதியாக ராதிகா குமாரசுவாமி கலந்து கொண்டார்.இந் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு மட்டங்களைச் (பாராளுமன்றம்,மாநகர சபை,உள்ளூராட்சி மன்றம்) சேர்ந்த பெண் அரசியல் செயற் பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வானது 3 மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் இடம்பெற்றது.இதில் மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி , முன்னால் நகர சபை உறுப்பினர் சல்மா கம்சா அவர்களும் பங்குபற்றி அரசியலில் பெண்களின் பங்கு பற்றுதலை அதிகரித்தலும்,பெண்கள் எதிர் நோக்கும் சவால்களும், அச் சாவல்களினை முறியடிக்கும் முறைகளும் ஆராயப்பட்டன.


