புனித ரமழான் காலபகுதிகளில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்சியில் வெற்றி பெற்ற 200 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், பணப்பரிசும் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒழுக்கமும் அறிவும் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானது ஒன்றாகும் அதனை முன்னிட்டு செயற்படும் சீமோ அமைப்பினை பாராட்டுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸிஸ் தெரிவித்தார்.
சீமோ அமைப்பினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான புனித ரமழான் காலபகுதிகளில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்;சியில் வெற்றி பெற்ற 200 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், பணப்பரிசும் வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஏ.ஜீ.கபீர் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவனுக்கு 15,000 ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தை பெற்ற மாணவனுக்கு 10,000 ரூபா பணப்பரிசும், மூன்றாம் இடத்தை பெற்ற மாணவனுக்கு 5000 ரூபா பணப்பரிசும் ஏனைய மாணவ மாணவிகளுக்கு 1000 ரூபா ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச உதவி செயலாளர் டி.ஜே. அதிசயராஜ் அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தௌபிக், அரச சார்பற்ற அமைப்புகளின் இனைப்பாளர் இர்பான் உட்பட உலமாக்களும் ,உயர் அதிகாரிகளும், கல்விமான்களும் கலந்து கொண்டனர்.









