பிள்ளைகளை உயிரைப்போன்று காப்போம் என்ற தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி..!

எம்.ரீ.எம்.பாாிஸ்-
பிள்ளைகளை உயிரைப்போன்று காப்போம்” எனும் தொனிப் பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர்களை காப்பது தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கை இன்று காலை புதன் கிழமை 10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில்மட்டக்களப்பு மாவட்டத்தில் 4ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை கொண்டு ஒரு நாளில் நாடு முழுவதும் என்ற இத்தேசிய வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டு பிராந்திய தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

இதன் நோக்கம் அண்மை காலங்களில் பிள்ளைகளுக்கு எதிராக இடம் பெறும் துஷ்பிரயோகம், வன்முறை, கொலை, கடத்தல் தொடர்பாக பிள்ளைகளை பாதுகாப்பது அவர்களது நலன் பேனுவதும் பெற்றோர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பாடசாலை மற்றும் ஒட்டு மொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.

இதனை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராக இளைஞர், யுவதிகளை விழிப்பூட்டுவது என இவ்வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர், பொலீஸ் திணைக்களம், பாடசாலை அதிபர்கள், சமூக நிறுவனங்கள் பெற்றோர்கள் மற்றும் அரச,  அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின்னூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் கோறளைப்பற்று, மேற்கு, மத்தி, தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் மட்டு பிராந்தியதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதேச செயலாளர்களான எம்.எம்.நௌபர்,திருமதி நிஹாரா மௌஜூத், அல்-கிம்மா நிறுவனத்தின்உதவிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சிறுவர்களது உரிமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டிகளில் ஸ்டிகர்களும் ஒட்டப்பட்டது. மாணவர்களின் விழிப்புட்டும் ஊர்வலமும் இடம் பெற்றமைகுறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -