நாட்டின் எதிர்காலத்திற்காக தமது பயணம் மெதுவானதாக இருந்த போதிலும் அதனை பின்னோக்கி நகர்த்த தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 64வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்திற்காக சவால்களுக்கு முகங்கொடுத்து முன்நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனநாயக நாடொன்றில் அரசாங்கம் ஒன்று மாற்றமடைவது வியப்புக்குரிய விடயமல்லவென குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் வெற்றியை பெறுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொறுப்பு மற்றும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வருடம் ஒன்றிற்குள் அரசியல் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சகலரும் இன்று ஒரே மேடையில் அமர்ந்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.





