புதிய அமைச்சரவைக்கான பதவி பிரமாணங்கள் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவி பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை வலுவடைய செய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளார்.
இணைப்பு 2
48 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதுடன் பிரிதொரு நாளில் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.
