மேலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஐந்து அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 45 பேரும் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 42 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், முன்னதாக வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர பதவியேற்றதன் படி, தற்போதைய நிலையில், 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
48 அமைச்சரவை அமைச்சர்கள், 45 ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்காக நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களை தவிர்த்து, மேலும் ஐந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன.
