புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு ஊழல், மோசடிகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபை முதல்வரின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலர், பல்வேறு ஊழல், முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என அண்மைக்காலமாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் முன்னேற்றம் குறித்த அறிக்கையையும் உள்ளடக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
