சம்மாந்துறையில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

ன்று 25-09-2015 வெள்ளிக் கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை இளைஞர்களினால் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இக் கண்டன ஆர்பாட்டத்தில் பெரும் திரளான
சம்மாந்துறை இளைஞர்கள் கலந்து கொண்டதோடு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கோசங்களினை உணர்வு பூர்வமாக எழுப்பி இருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.


இவர்களின் கோசங்கள் “இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகத்தினை கண்டித்தல்,சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு மரண தண்டனையினை அமுல்படுத்த இலங்கை அரசிற்கு அழுத்தத்தினை வழங்குதல்” போன்றவற்றினை மையப்படுத்தி இருந்தது.

இவர்களின் இவ் ஆர்பாட்டமானது இளைஞர்கள் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான விழிர்ப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுவதோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வழி கோலியுள்ளது எனலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -