மினாவில் ஏற்பட்ட அனர்த்தம் 717 ஹாஜிகளின் வபாதுக்கும் ஈரானியர்களே காரணம்-வீடியோ இணைப்பு

மினாவில் ஏற்பட்ட அனர்தத்துக்கும் அதைத் தொடர்ந்து 700 க்கும் அதிகமான ஹாஜிகளின் வபாதுக்கும் யார் காரனம் என்ற தகவலை “அல் முவாதின்” இணையதளம் சம்பவ இடத்தில் இருந்த நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆதாரமாக் கொண்டு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் தறாவினஃ எனும் ஹாஜி சாட்சியமளிகையில் “ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹாஜிகள் ஹஜ்ஜாஹிகளின் நகர்வை முடக்கும் விதமாக ஒன்று சேர்ந்து கொண்டு அரசியல் கோஷங்களை எழுப்பியதே நெரிசலுக்குக் காரனமாக அமைந்தது” எனக் குறிப்பிட்டார்.

குவைட் நாட்டைச் சேர்ந்த ஹாஜி காலித் அல் ஆஸிமி சாட்சியளிக்கையில்
” ஈரானைச் சேர்ந்த ஹாஜிகள் ஒன்று சேர்ந்து கொண்டு ஹஜ்ஜாஜிகளின் நகர்வை முடக்கி போலீஸார் நெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததாகவும் தெரிவித்தார்.

மொரோக்கோவைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் அப்துஸ் ஸலாம் தெரிவிக்கையில் ” 203 மற்றும் 204ம் இலக்க வீதிகளின் சந்தியில் ஈராணியர்கள் ஒன்று திரண்டு கொண்டு ஹாஜிகளின் நகர்வுக்கு ஊறு விளைவித்ததே நெரிசலுக்குக் காரனம் ” எனத் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -