ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்!

பி. முஹாஜிரீன்-

ட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை (05) காலை 9.00 மணியளவில் அறபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.ஆர். முகம்மது றமீன் (மதனி) தெரிவித்தார்.

இதற்கமைய ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியில் கற்ற இலங்கையின் சகல பிரதேசங்களிலுமுள்ள, அழைப்புக் கிடைக்கப்பெற்ற மற்றும் அழைப்புக் கிடைக்கப் பெறாத கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் அறபுக் கல்லூரியின் அபிவிருத்தி பற்றிய முக்கிய வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப் படவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் நடப்பு வருட நிருவாகத் தெரிவும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத தொடர்பான மேலதிக தகவல்களுக்க 0672255049 மற்றும் 0774272919 ஆகிய
தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -