அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கயந்த நியமனம்...!

தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது, புதிய அமைச்சரவை பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

நெல்லை கொள்வனவு செய்வது தொடர்பாக குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கான முறையொன்று அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது கூறியுள்ளார்.

இதனை தவிர உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் துறைக்கு பொறுப்பான அமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நியமிக்க பிரதமர் யோசனை முன்வைத்ததுடன் அதனை ஜனாதிபதி வழிமொழிந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -