மஹிந்த ஆட்சியில் வீழ்ந்திருந்த முஸ்லிம் சமய கலாசார அமைச்சு மீண்டும் ஹலீமுக்கு - புத்திஜீவிகள் சங்கம் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் வீழ்ந்திருந்த முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சை மீளவும் நிமிர்த்தி எடுத்து குறுகிய காலத்தில் அதற்குரிய தனித்துவ அடையாளத்தையும் அதற்கு நீரூட்டி விருட்சமாக்கிய அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமுக்கு மீண்டும் அதே பதவிகிடைத்தமையிட்டு கண்டி மாவட்டத்தலுள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல முழு நாட்டு இனைத்து இன மக்களும் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாருக்கு நல்வாழ்துக்களை நல்லாசிகளையும் தெரிவிப்பதாக கண்டி மாவட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் சங்கம் கருத்து வெயிட்டுள்ளது.

கண்டி மாவட்ட முஸ்லிம் புத்தவிஜீவிகள் சங்கம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மீண்டும் அதே அமைச்சுப் பதவி வழங்கியமையிட்டு வெளியிட்டுள்ள கருத்தில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளது

அந்தச் சங்கம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொள்வதில் கடந்த காலங்களில் பல சிக்கல்களையும் சிரமங்களையும் ஹஜ் யாத்திரையாளர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். இதில் பல சட்ட சிக்கல்களும் பல முடிச்சுகளும் போடப்பட்டிருந்ததன. அவற்றை நீதமாகவும் நிதானமாகவும் சிந்தித் ஹஜ் யாத்ரையாளர்களும், முகவர்களும் எவரும் பாதிக்கடாத வகையில் அதற்குள் காணப்பட்ட சவால்களையும் பேராட்டங்களையும் இலகுவாக முறியடித்து ஒரு சாதாரண நிலைக்கு கொண்டு வந்தவர் அமைச்சர் ஹலீம். இதனை யாராலும் மறைக்க முடியாது.

எனவே, அந்தவகையிலேதான் இம்முறை எந்த சிக்கலும் தங்கு தடையுமின்றி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் யாத்திரையாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். 

கண்டி முஸ்லிம் மக்களுடைய பல்வேறு வளர்ச்சிக்கு புது இரத்தசம் பாய்ச்சிய ஒருவர் தான் மறைந்த ஏ. சீ. எஸ். ஹமீத். அத்தகைய புது இரத்தம் பாய்ச்சிய தலைவரின் மருமகன் அமைச்சர் எம். ஏ. எச். ஹலீம். இவர் மறைந்த அமைச்சர் ஹமீதின் எண்ணக்கருக்களுக்கு உருக் கொடுத்து மீளவும் கண்டி மாவட்டத்தையும் முழு இலங்கை முஸ்லிம்களையும் கௌரவப்படுத்தும் வகையில் அமைச்சர் ஹலீமுக்கு மீள அதே அமைச்சுப் பதவி வழங்கி வைக்கப்பட்டமை என்பது பெரும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது.

அமைச்சர் ஹலீம் பன்முக அரசியல் அனுபவங்களைக் கொண்டவர் மறைந்த அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீதின் அந்தரங்கச் செயலாளர், மாகாண சபையில் இருக்கும் போது பல்வேறு மாகாண அமைச்சுக்களை வகித்த ஆளுமைப்புலமை உள்ளவர். 

கடந்த கால அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படாத பள்ளிவாசல் புதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்து அற்குரித்தான நடவடிக்கைகளை எடுத்தது என்பதும் அமைச்சரது சமூகப் பற்றையும் சேவை நலனையுமே எடுத்துக் காட்டுகிறது.

இவற்றுக்கும் மேலாக இவர் ஒரு அரசியல்வாதி என்ற சொல் நிலைக்கப்பால் ஒரு சிறந்த மனித நேயமிக்க மனிதர். அதனால்தான் இவருக்கு கண்டி மாவட்டத்தில் அதுவும் முஸ்லிம்களுடைய வரலாற்றில் 1110011 விருப்பு வாக்குகளைப் பெற்று முதன்மை இடத்திற்கு வரவாய்ப்பு கிட்டியுள்ளது. 

எதிர்வரும் காலங்களில் அமைச்சர் உருவாக்கிய காலத்து வரலாறுகள் முத்திரைகளாக பொறிக்கப்படவுள்ளது . எனவே தம் சமூகம் நலன் கருதியும் இந்நாட்டு அனைத்து இன மக்களுடைய தேவை நலன் கருதியும் ஒரு பொது நியதியின்படி பணியாற்றக்; கூடிய வல்லமை படைத்தவர். எனவே அமைச்சரின் பணிகள் தொடர சங்கத்தினர் பாராட்டுக்களையும் நல்லாசிகளையும் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என சங்கம் மேலும் சுட்டிக் காட்டி கருத்து வெளியிட்டது.
இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -