பாறுக் ஷிஹான்-
தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் பிராத்தனை நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.அகிலன் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்களிற்கு தேர்தல் திணைக்களத்தின் ஆரம்பம் முதல் அதன் செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்தனர்.
இதனை கிராமசேவகர் ஆர்.சல்பீர் நெறிப்படுத்தியதுடன் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் எ.சி முபீன் மற்றும் பேஷ் இமாம் மௌலவி மஹ்மூத் பலாஹி உள்ளிட்டோர் இதன் போது கலந்து கொண்டனர்.


