எம்.ஐ.எம்.றியாஸ்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் முயற்சியால் அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 147 பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் வைபவம் இன்று புதன்கிழமை (23) பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல்லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதாரப் பொருட்களை பயனாளிகளிடம் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸாம்(மதனி), உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உட்பட அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது 25 இலட்சம் பொறுமதியான வாழ்வாதாரப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தலைவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





