அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நான்கு ஆனங்களும் தனித்து ஒரு ஆசனமும் பெற்று 05 ஆசனங்களை சொந்தமாக்கியிருக்கும் வேளையில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசணமும் கிடைக்கும் என்று உயர்பீட உறுப்பினர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
அது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்டதில் நான்கு ஆசங்களைப் பெற்றுள்ளதுடன் அக்கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு கட்சிகளும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் பகிர்ந்தளிப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறாயினும் வாக்குறுதிகள் சரியாக அமைந்தால் எல்லாமே சரியாக இடம்பெறும் என்றும் உயர்பீட உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
