அஸ்ரப் ஏ சமத்-
பம்பலப்பிட்டி பேல் றிச் கோட்டலில் முன்னாள் பிரதியமைச்சா் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் அழைப்பின் பேரில் இன்று ஊடக மாநாட்டொன்று நடைபெற்றது.
இங்கு பாராளுமன்ற உறுப்பிணா் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில் -
இந்த நாட்டில் எல்லோரும் தத்தமது பிரதேசத்திற்கு ஒரு .எம்.பி கேட்டு அலைந்து வாக்குவாதப்பட்டு அலைந்து திரிகின்றனா். ஆனால் 140 வாக்குகளால் மட்டும் நான் மட்டக்களப்பு மாவடத்த்தில் தோல்வியடைந்த எனக்கு ஒரு தேசிய பட்டியல் மூலம் ஒரு எம்.பி பதவியை ஜனாதிபதி வழங்கியுள்ளாா். இப் பதவியை மீள தந்தமைக்கு நான் ஜனாதிபதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என் பாராளுமனற பிரநிதித்துவம் தந்ததையிட்டு அதனை சில காழ் புணா்ச்சி கொண்ட நல்லாட்சி இயக்கமும் முஸ்லீம் காங்கிரஸ் காரா்களும் என்மீது பொறாமை கொண்டவா்கள் இதனைப் பொறுக்க முடியாமல் இவா்கள் என் மீது வீன் பழிசுமத்துகின்றனா்.
எனக்கு எதிராகவும் எனது ஆதரவாளா்கள் மீதும் ஊடகங்களிலும் பொய்யான அறிக்கைகளையும் கருத்துக்களையும் நேற்று தெரிவித்தனா். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
காத்தான்குடியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டவா்கள் எவரானாலும் அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள். அங்கு பாரிய சம்பவங்கள் ஒன்று நடைபெறவில்லை 3 பேர் காயங்களுக்கு உட்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த வெள்ளிக்கிழமை எனக்கு தேசியப்பட்டியல் பிரநிதித்துவம் கிடைத்ததும் எனது ஆதரவாவாளா்கள் அதுவும் அந்த ஊரில் எனக்காக பாடுபட்ட சில இளைஞா்களும் பெண்களும் பெரியவா்களும் மிகவும் சந்தோசப்பட்டு பாதையில் ஆரவாம் செய்து வெடில் கொழுத்தி கொண்டாடியுள்ளனா். அதுவே அங்கு நடைபெற்ற சம்பவமாகும்.
எனது ஆதரவாளா்களுக்கு எதிராக முதலில் முஸ்லீம்காங்கிரஸ் காரா்களே மோதலுக்குச் சென்று எங்களது ஆதரவாளா்களளைத் தாக்கியுள்ளனா். இந் சம்பவம் நடைபெற்ற அன்று நானோ எனது ஏனைய அரசியல் உறுப்பிணா்களோ ஊரில் இருக்க வில்லை. கொழும்பில் இருந்தோம். இதனால் இரண்டு பக்கமும் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இச்சம்பவம் பற்றி நான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகா் அறிவித்து அதன் சம்பந்தப்பட்டவா்கள் பொலிசாாரினால் கைது செய்யப்பட்டுள்ளனா். எனது ஆதரவாளாரான பதுரியா மகளிா் அமைப்பின் தலைவிக்கு அவா்கள் அடித்துள்ளளா். இப் பெண்னை தாக்கிய முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளா் ஒருவா் பொலிசாரினால் பிடிக்கப்பட்டுள்ளளாா்.
எனக்கு எதிராக நல்லாட்சிக்கான இயக்கம் நிதிமோசடிப் பிரிவில் முறைப்பாடு கள் செய்திருந்தனா். அவ்விடயம் பற்றிய எனது சட்டத்தரணி முலம் சென்று அக் குற்றம் பொய்க் குற்றம் என நிறுபீக்கப்பட்டு இதுவரை எனக்கு எவ்வித அழைப்போ விசாரனையோ வரவில்லை. எனக்கு எவ்வித குற்றங்களும் இல்லை.
ஏற்கனவே நடைபெற்ற சிலிங்கோ கம்பணி நிதி பற்றி வழக்கில் உரிய முறையில் பணம் செலுத்தி அவை தீா்க்கப்பட்டு விட்டன இதனை வேறு விதமாக நேற்று நல்லாட்சிக்கான இயக்கம் எனக்கெதிராக சில விசமத்தனமான செய்திகளை பரப்பி எனது பாராளுமன்ற உறுப்பிணா் பதவியையும் பறிக்க வேண்டும. என கொழும்பிலும் சொல்லியிருந்தனா்.
என்னை தோற்கடிக்க வேண்டும் என்றே அவா்கள் காத்தண்குடியில் நல்லாட்சி இயக்க உறுப்பிணரும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா்களும் பாடுபட்டாா்கள். ஆனால் இறைவன் என்னை கைவிடவில்லை. அப்பதவியை வேறுவிதமாக எனக்கு தந்துள்ளா்ன்.
இந்த நாட்டில் தேசிய பட்டியல் எம்.பி கேட்டு கட்சி வாசல்களிலும் தலைமைத்துவங்களிலும் சிலா் மண்டியிடுகின்றனா். ஆனால் முஸ்லீம் காங்கிரசும், நல்லாட்சி இயக்கமுமே தனக்கு வழங்க்பட்ட தனது பிரதேசத்திற்கு பிரநித்துவம் வழங்கப்பட்டதை மீளப் பெறும் மாறு கோருகின்றனா். இது இவா்களது பொறமையினையும் அரசியல் காழ்புணா்ச்சியையுமே காட்டுகின்றது.
நாங்கள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரு சுதந்திர உறுப்பிணா்களாகவே இயங்கினோம். இன்றும் அவ்வாரே செயல்படுகின்றோம். என்னுடன் மாகாணசபை உறுப்பிணா் சுபையிர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உ்ளள உறுப்பிணா்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் உள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியை அந்த மாவட்டத்தில் எதிா்காலத்தில் பலப்படுத்துவோம்.
