18 ஓட்டங்களோடு விடைபெற்றார் சங்கா...!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

எனவே இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வௌியேறி ஏமாற்றமளித்துள்ளார்.

மேலும் முதலாவது இன்னிங்சிலும் அவர் 32 ஓட்டங்களை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த 20ம் திகதி 2வது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அபாரமாக ஆடிய அந்த அணி முதல் இன்னிங்சில் 393 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 306 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்தியது.

தற்போது இலங்கை அணி 413 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -