றியாஸ் இஸ்மாயில்-
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் வியூகத்தையும் அவரையும் படுதோல்வியடைச் செய்து அவரை அக்கரைப்பற்றிலிருந்து கிளின் போல்ட் ஆக செய்வதில் பெரும் பங்காற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் செயற்பாடுகளை யாரும் என்றுமே மறந்துவிடக் கூடாது என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சீட்ஸ் நிறுவனத்தின் மாவட்ட ஆலோசகருமான எம்.எல்.கலீல் தெரிவித்தார்.
சீட்ஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதுறை உறுப்பினர்களின் ஒன்று கூடல் சீட்ஸ் அமைப்பின் மாவட்ட அரசியல் பிரிவு ஆலோசகர் அதிபர் ஏ.எல்.யாசீன் தலைமையில் நேற்று(28) இரவு அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரை ஜௌபர் மாஸ்டர் கபானாவில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
கடந்த பல வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் எமது தலைவரையும் எந்நேரமும் விமர்சித்து எங்களது கட்சியை கூறுபோட நினைத்து செயற்பட்ட அதாஉல்லாவின் கதை கடந்த பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக முடிவடைந்து விட்டது இதற்கு பிரதான காரணமாக செயற்பட்ட நமது கட்சியின் உயர்பீட உறுப்பினர் அக்கரைப்பற்று பிரதேசத்தின் மைந்தன் தவத்தை எமது கட்சி என்றும் மறவாது என்பது திண்ணம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அக்கரைப்பற்றில் இனி எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் ஆட்டமிழந்த முன்னாள் அமைச்சர் மீண்டும் விளையாட முடியாது இவர் இனி எழும்பவே முடியாது காரணம் அவர் கிளின் போல்ட் ஆகிவிட்டார்.
அம்பாறை மாவட்டத்திற்கு உரித்தான கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்பட வேண்டும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணஆட்சியில் பங்களியாக மு.கா.செயற்பட்மையினால் மாகாண ஆட்சியில் இரண்டுஅமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டன இதில் மாவட்டக்களப்பு மாவட்டத்திற்கு விவசாயஅமைச்சும் அம்பாறை மாவட்டத்திற்கு சுகாதார அமைச்சும் வழங்கப்பட்டது
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகமைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதன் காரணமாக கிழக்கு மாகாண ஆட்சியினை ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எமது தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண ஆட்சி விடயமாக வியூகம் வகுத்து சதுாரியமாக செயற்பட்டதன் காரணமாக மாகாணஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி சிறி லங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுகளையும் பெற்று முதல்தடவையாக நல்லாட்சியின் மூலம் மாகாண ஆட்சியினை ஸ்திரத்தண்மையுடன்ஏற்படுத்தினார்.
இதில் முதமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஹபீஸ் நஸீர் அஹமட் அவர்களும்(மட்டக்களப்புமாவட்டம்) அம்பாறை மாவட்டத்திற்கு எம்.ஐ.எம்.மன்சூருக்கு மாகாண சுகாதாரஅமைச்சும் ஏனைய கட்சிகளுக்கு அமைச்சுகளும் தவிசாளர் பதவிகளும் வழங்கப்பட்டன.
எப்போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இதயம் என்று கூறப்படும் அம்பாறைமாவட்டத்திற்கு இரு முறை அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ்தலைவரினால்வழங்கப்பட்டுவந்துள்ளதை இவ்விடத்தில் கூறியாக வேண்டும் தேர்தல் மூலம் அந்நேரத்தில்கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட7 மாகாண சபை உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள்அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
கடந்த 17 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்முஸ்லிம் காங்கிரஸ்சார்பாக போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர் இதில் முன்னாள்சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்இவரின் சுகாதார அமைச்சருக்கான வெற்றிடம்அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்பட வேண்டும் ஏனெனில் மாகாண சபை அமைச்சில் ஒர்அமைச்சு மட்டுமே அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது இதை இம்மாவட்ட மக்கள் ஒரு போதும் இதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் மு.கா.வின் கோட்டையாக அம்பாறைமாவட்டத்தை இம்மக்கள் மீண்டும் நிறுபித்துக்காட்டியுள்ளனர் ஆகவே விரைவாக சுகாதார அமைச்சுப் பதவி இம்மாவட்டத்தில் பெருத்தமான நபருக்கு வழங்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட மு.கா.போராளிகள் எதிர் பார்த்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,சீட்ஸ் நிறுவனத்தின் மாவட்ட மட்ட உயர்பீட உறுப்பினர்கள்,பிரிவு ஆலோசகர்கள்,போசகர் உடபட பலர் கலந்து கொண்டனர்.