ஹரீஸ் மற்றும் மன்சூர் எம்.பி கலந்து கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள்...!

ஹாசிப் யாஸீன்-

திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் இணைந்து சனிக்கிழமை (29) காலை முதல் இரவு 12 மணி வரை அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களுக்கு நேரடியாக விஜயம் செய்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சவளக்கடை, சென்றல் கேம்ப், கொhலனி, பிரதேசங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பிகளை பிரதேச மக்கள் பட்டாசு கொளுத்தி மாலை அணிவித்து வீதி வீதியாக ஊர்வலமாக வாகனங்களில் அழைத்துச் சென்று வாக்களித்த மக்களுக்கு நேரடியாக தங்களது நன்றிகளை தெரிவித்தனர். அத்துடன் இப்பிரதேச மக்களால்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து குடிவில், வாங்காமம், அட்டாளைச்சேனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

இதன்போது இப்பிரதேசங்களில் இடம்பெற்ற நன்றி நவிலல் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வாக்களித்த மக்களுக்கு தங்களது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்ததுடன் எமது மாவட்ட மக்கள் வேண்டி நிற்கும் அபிவிருத்திகள், அபிலாஷைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை அனைத்தையும் கட்சியின் தலைமையோடு இணைந்து நாங்கள் மேற்கொள்வோம் என இம்மக்களிடம் வாக்குறுதியளித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -