கடந்த இரு தினங்களுக்கு முன்னராக நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலை சற்று உற்று நோக்க வேண்டிய கடமைப்பாடு எம்மிடத்தில் கட்டய தேவைப்பாடாக இருக்கிறது
ஏனெனில் இந்த தேர்தலில் பல முன்னால் பாராளு மன்ற உறுப்பினர்கள் எல்லாம் இத் தேர்தலில் படு தோல்வி அடைந்து அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓரங் கட்டப் பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்ததே
கடந்த காலங்களில் பேரின வாதிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பல் வேறு வகையான இழப்புக்களுக்கும் குரல் கொடுக்காத சில பழமை வாய்ந்த அரசியல் வாதிகளும் இம் முறை நடந்த தேர்தலில் தோல்வியை தளுவியிருப்பது அல்லாஹ்வின் கோபப் பார்வையே அன்றி வேறல்ல என்பதையும் அவர்கள் புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்
இன்னும் சில அரசியல் வாதிகள் இம்முறை தாம் நினைத்ததை பெற்றுக் கொள்ள வில்லை என்பதை நாம் அறிந்ததே படைத்த இறைவனை மறந்து தான் பேசும் அரசியல் மேடை பேச்சுக்களிலெல்லாம் தலைக்கணத்துடன் தான் இவரை தோற்கடிப்பேன் நாம் இவ்வளவு ஆசனங்கள் பெறுவோம் எங்களால் முடியும் என்று தங்கனம் கட்டிக் கொண்டு பேசிய சில அரசியல் வாதிகளும் இம்முறை தான் நினைத்ததையும் பெற்றுக் கொள்ளாமல் பிறரையும் வெற்றி பெறச் செய்து இருக்கிறார்கள் இதுவெல்லாம் இவர்கள் இறைவனை மறந்து பேசியதற்கு இறைவன் அளித்த தீர்ப்பே என்பதை புரிந்து கொண்டால் போதும்
இன்னும் எமது தேசிய கட்சியிலிருந்து பாராளு மன்றம் சென்ற அரசியல் வாதிகள் சிலர் மேடைப் பேச்சுக் களில் எல்லாம் தன்னை வளர்த்த கட்சிக்கு தன்னை விட ஒரு ஆசனம் கூட எடுத்தால் தான் பதவியிலிருந்து வெளியேறுவதாக வெல்லாம் சவால் விட்டு அரசியல் செய்ததை எம்மால் காண முடிந்தது இதையும் அல்லாஹ் ஏதோ ஒரு வகையில் முறியடித்து இருக்கிறான் ஆனால் அவர்கள் பதவியிலிருந்து விலகப் போவதுமில்லை அவர்கள் எல்லாம் வெறும் வாய்ப் பேச்சில் மட்டும் தான் யோக்கியர்கள் என்பதையும் நாம் அறிந்து வைத்து இருக்கின்றோம்
முன்னால் ஜனாதிபதியுடன் ஒட்டி வாழ்ந்த சில அரசியல் வாதிகளும் தற்போது அரசியலில் இருந்து ஓரங்கட்டப் பட்டு இருக்கிறார்கள் இவர்களெல்லாம் மக்கள் ஒரு நல்லாட்சியை விரும்பி நாட்டில் ஒரு நேர்மையான ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க முட் பட்ட போதும் இவர்கள் முஸ்லிம்களையும் தனக்கு எதிரியாக்கி தனது சுய லாபத்துக்காக அல்லாஹ்வையும் மறந்து அரசியல் செய்தார்கள் இதனால் அல்லாஹ்வின் கோபப் பார்வையால் இவர்களும் தனது அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்கள்
மொத்தமாக சொல்லப்போனால் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் பாராளு மன்றத்துக்கு எடு பட்டு இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளில் மொத்த தொகை எமது தேசிய கட்சியில் அதன் ஸ்தாபகர் இருக்கும் காலத்தில் இருந்ததை விட மிகக் கணிசமானவையே
இதிலிருந்து புலப்படுகிறது என்ன வென்றால் இன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளேல்லாம் ஒற்றுமையிழந்து காணப்படுகிறா்கள் பணத்துக்காவும் பதவிக்காவும் பிறரை விமர்சித்து தன்னை சமூகத்தில் நல்லவனாக காட்டிக் கொள்ள எதையும் துணிவுடன் செய்து அல்லாஹ் வின் சாபத்தையும் பெற்று தானும் நஷ்ட்டம் அடைந்து போகிறார்கள்
கடைசியாக ஒன்றை சொல்கிறேன் இந்த நிலை தொடருமேயானால் நிச்சயமாக எதிர் வரும் காலங்களி்லும் சில அரசியல் வாதிகள் அரசியலிருந்து ஓரங்கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது
(வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை)
