ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கைலாகு செய்ய முயற்சித்த போது அவர் அதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இணைப்பு2
ஜனாதிபதி செயலகத்திற்கு பதவிப் பிரமாணம் செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு வருகை தருகையில் மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் எழுந்து நின்றதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைலாகு செய்ய முயற்சித்தார் இதன் போது சமய நிகழ்வுகளுக்கு செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறுத்துள்ளார்.
தெளிவான வீடியோ இதோ ...