அம்பாறை மாவட்டத்தின் வெற்றி:அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் வெற்றியாகும்- கொண்டாட்டம்

செய்தியாளர்- அபு அலா -
ம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 3 வேட்பாளர்களின் வெற்றியை அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருடன் இணைந்து இன்று (18) மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் அட்டாளைச்சேனை காரியாலயத்துக்கு முன்பாக கொண்டாடினார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஆப்தீன் தமீம், எம்.எல்.கலீல் மற்றும் உயர்பீட உறுப்பினர் யூ.எல்.வாஹிட் கட்சியின் ஸ்தாபக செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிகொண்டாட்டத்தில் பங்கெற்றிருந்தனர்.

இச்சந்தோஷ நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பாற்சோறு வழங்கி வைத்து அந்த மக்களின் சந்தோஷத்தில் பங்குகொண்டதன் பின்னர் மக்களுக்கு சிறு உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -